'ஐபிஎல் போட்டிக்கு வந்திருக்கும் சிக்கல்'...இந்திய வீரர்கள் விளையாடுவார்களா?

Home > தமிழ் news
By |

இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.ஒரு நாள் போட்டிக்கான கோப்பையை வென்ற இந்திய அணி தற்போது T20 தொடரில் விளையாடி வருகிறது.நியூசிலாந்திற்கு எதிரான தொடர் முடிந்ததும் தாயகம் திரும்பும் இந்திய அணி,ஆஸ்திரேலியாவுடன் விளையாட உள்ளது.

இந்நிலையில் வரும் மே மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடங்க இருக்கிறது.இதனால் தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணிக்கு ஓய்வு என்பது நிச்சயம் தேவையான ஒன்று என பல தரப்பிலிருந்தும் குரல்கள் வந்த வண்ணம் இருந்தன.இதனிடையே ஐ.பி.எல் டி-20 லீக் தொடர் வர இருப்பதால்,இந்திய அணி வீரர்களில் பலரும் அதில் இடம்பெறுவார்கள். ஐ.பி.எல் போட்டியில் விளையாடும்போது காயம் ஏற்பட்டால், உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 'ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் கேப்டன்களிடம் வீரர்களுக்கு ஓய்வு அளிப்பது பற்றி பேச உள்ளோம். வீரர்களின் உடல் தகுதி உலகக்கோப்பை அணியை பாதிக்காதவாறு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்'என்று தெரிவித்தார்.

IPL, CRICKET, BCCI, RAVI SHASTRI, IPL 2019

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS