சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த 'கீதா கோவிந்தம்' படத்தில்  ஹீரோயினாக நடித்த ராஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி-ராஷ்மிகா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் திருமணம் நின்று போனதாக கூறப்பட்டது.

 

இந்தநிலையில் ராஷ்மிகாவின் அம்மா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அதில், ''இருவருக்கும் ஒத்துப்போகும் என தெரியவில்லை. இந்த திருமணத்தால் இருவரின் கேரியரும் பாதிக்கப்பட்டது. ராஷ்மிகாவின் இந்த முடிவு கடினமானது.

 

சில காரணங்களால் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. இதனால் இந்த முடிவை ஒரு மாதத்திற்கும் முன்பே எடுத்து விட்டோம்.எனினும் இருவருக்கும் அவர்களின் கேரியர் முக்கியமானது. தன்னை காயப்படுத்திக் கொண்டு வாழக்கூடாது. இருவரின் குடும்பத்தினரும் அவரவர்களின் வேலையில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியுள்ளோம்,'' என தெரிவித்துள்ளார்.

BY MANJULA | SEP 11, 2018 6:46 PM #GEETHAGOVINDAM #RASHMIKAMANDANNA #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS