‘பெருமைப்படுத்துகிறது சர்கார்’: விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்-சன் பிக்சர்ஸ் கூட்டணிக்கு நன்றி சொல்லும் மீனவர்கள்!

Home > தமிழ் news
By |

மீனவர்களின் துயரத்தை நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது தங்களுக்கு ஆறுதலாக உள்ளதால், நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாஸூக்கு ராமேஸ்வரம் மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

 

இதுதொடர்பாக பேசிய மீனவர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சின்னத் தம்பி, ‘இந்தியாவுக்கு 50 ஆயிரம் கோடி அந்நியச் செலாவனியை ஈட்டி, 20 ஆயிரம் பேருக்கு சமத்துவமான பணிவாய்ப்பு அமைத்துதரும் மீனவர்களை இரண்டாம் தரவர்க்க குடிமக்களாக பார்க்கும் மத்திய மாநில அரசுகளுக்கு மத்தியில், சர்கார் படத்தில் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் படும் அவதிகளை, மீனவர்கள் கடலிலும் கரையிலும் படும் துயரங்களை காண்பித்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

 

மேலும் தான் மீனவர் என்றும், மீனவர் நாட்டை காக்க உயிரையே கொடுப்பவர்கள் என்றும், மீனவன் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை  உடையவர் என்றும் கருத்துக்களைச் சொல்லி மீனவர்களை பெருமிதத்துக்குள்ளாக்கியுள்ளதாக கூறி, சர்கார் படத்தில் நாயகனாக நடித்துள்ள விஜய், இப்படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் கலாநிதிமாறன் ஆகியோருக்கு தங்கள் ஏகோபித்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறிய்ய்ள்ளார்.

SARKAR, VIJAY, ARMURUGADOSS, SUNPICTURES, FISHERMEN, TAMILNADU, MOVIE, ARRAHMAN, RAMESHWARAM

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS