‘அப்படி நினைத்தால் புத்தி பேதலித்துள்ளது என அர்த்தம்’: ரஜினிகாந்த்!

Home > தமிழ் news
By |

நடிகர் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் ரஜினிகாந்த், வெளியிட்டுள்ள தனது அறிக்கையில்  ‘நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பதவி வாங்கனும், பணம் சம்பாதிக்கனும் என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்க மாட்டேன். அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகி விடுங்கள்’ என்று ஏற்கனவே கூறியிருந்ததை நினைவு படுத்தியுள்ளார்.

 

மேலும் தமிழகத்தில் ஒரு புதிய அரசியலை அறிமுகப்படுத்தி, மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு வருகிறோம்; மற்றவர்களைப் போலவே அரசியல் செய்வதற்கு நாம் ஏன் புதிதாக அரசியலுக்கு வர வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளளார்.

 

கூடுதலாக இந்த அறிக்கையில், ‘வெறும் ரசிகர் மன்றத்தை மட்டுமே வைத்து, அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என்று யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம்.  மக்களுடைய ஆதரவில்லாமல் அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது. 30-40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அல்லது அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிடமுடியாது’என்று கூறியுள்ளார்.

 

அத்துடன் மன்றத்துக்கான பணிகளை தானும் செய்யாமல், துடிப்புடன் இருப்பவர்களையும் செய்ய விடாமல் மன்றத்தின் கொள்கைகளுக்கு முரண்பாடாக இருந்தவர்களையே நீக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

RAJINIKANTH, RAJINIMAKKALMANRAM

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS