ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவின்  மனைவி கலாவதி பாய் (72) சிகிச்சை பலனின்றி, பெங்களூர் அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவு காலமானார். இதுகுறித்த தகவல் அறிந்த ரஜினி இன்று காலை விமானத்தில் பெங்களூர் புறப்பட்டு சென்றார்.

 

தற்போது பெங்களூரில் உள்ள இல்லத்தில் கலாவதியின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.இன்று மாலை அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது.

 

சிறுவயதில் தாய்-தந்தையை இழந்த ரஜினியை வளர்த்து ஆளாக்கியதில் சத்தியநாராயண ராவ்-கலாவதி பாய் இருவருக்கும், பெரும் பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS