'கஜா புயல், கூஜா புயல் ஆகிவிட்டது'...மேடையில் கலகலத்த தமிழக அமைச்சர்!

Home > தமிழ் news
By |
'கஜா புயல், கூஜா புயல் ஆகிவிட்டது'...மேடையில் கலகலத்த தமிழக அமைச்சர்!

தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினால் கஜா புயல், கூஜா புயல் ஆகிவிட்டது என மேடையில் பேசி மக்களை கலகலப்பாக்கினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

 

அவ்வப்போது ஏதாவது நகைச்சுவையாக பேசி வைரலாகி விடுவார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது 'இந்த அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கக்கூடிய ஆட்சியாக விளங்குகிறது.

 

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக, தற்போது ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதுபற்றி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்திவருகிறார். பட்டாசுத் தொழிலைக் காப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது'என்று கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் 'கஜா புயலானது தமிழகத்தை மிக கடுமையாக தாக்கும் என அனைவரும் கூறினார்கள்.இதனால் தமிழக அரசு மிக கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.இதனால் 'கஜா புயல் கூஜா புயல் ஆகிவிட்டது' என கூறினார்.அமைச்சரின் இந்த பேச்சு அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பலையை வரவைத்தது.

GAJACYCLONE, TN MINISTER, RAJENDRA BALAJI

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS