இடறி விழுந்து இடுக்கில் சிக்கும் ரயில் பயணி: பாதுகாப்பு அதிகாரியின் சமயோஜிதம்!

Home > தமிழ் news
By |
இடறி விழுந்து இடுக்கில் சிக்கும் ரயில் பயணி: பாதுகாப்பு அதிகாரியின் சமயோஜிதம்!

சென்னையில் பயணிகள் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயகரமான சூழலுக்கு தள்ளப்பட்ட பயணி ஒருவரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு கான்ஸ்டபிளின் அரிய செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

சென்னை பயணிகள் ரயிலில் அவ்வப்போது நிகழும் எதிர்பாரத விபத்துக்கள் பல நேரங்களில் உயிரிழப்புகளைக் கூட ஏற்படுத்தியுள்ள சம்பவங்களை அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. இந்த நிலையில் எக்மோர் ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன் பயணித்த பயணி ஒருவர் படியில் பயணம் செய்து வந்தபோது அவர் கால்தடுக்கி ரயிலில் இருந்து தவறி விழ நேர்ந்துள்ளது. 

 

அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு  போலீஸ்  கான்ஸ்டபிள் சுமன் உடனடியாக சமயோஜிதமாக அந்த பயணியின் கைகளைப் பிடித்து ஓடும் ரயிலில் இருந்து விழ நேர்ந்த அந்த பயணியை இழுத்து பிளாட்பார்மில் போட்டு காப்பாற்றியுள்ளார். சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்றுவருவதோடு, ரியல் ஹீரோவாக மாறியுள்ளார். 

 

TRAINACCIDENT, RPF, RAILWAY, SAVESOUL, LIFE, TAMILNADU, EGMORERAILWAYSTATION

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS