உணவகத்தில் தன்னிடம் வந்த சிறுவனுக்கு ராகுல் காந்தி கொடுக்கும் சர்ப்ரைஸ்: வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |

தனது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியமான தளமாக ட்விட்டரை உபயோகித்து வரும் ராகுல் காந்தி அவ்வப்போது ட்விட்டர் ட்ரெண்டிங் சுவாரஸ்யங்களுக்கும் பங்காற்றி ட்விட்டருக்கு கைம்மாறு செய்து வருகிறார். 

 

ஆனால் இதன்மூலம் கட்சியும் கட்சிக் கொள்கைகளும்  மக்களிடம் சென்று சேர்கிறதோ இல்லையோ,  எப்போதாவது, திடீரென ராகுல் காந்தி பிரச்சார தொனி தவிர்த்து இயல்பாகச் செய்யும் சில காரியங்கள் வைரலாகிவிடுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. 

 

அப்படித்தான் மத்திய பிரதேசத்தின் உணவகம் ஒன்றில் எதார்த்தமாக சிறுவன் ஒருவனுக்கு ஐஸ்கிரீம் ஸ்பூனால் ஊட்டிவிடும் ராகுலின் செயல் பலராலும் கவரப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பிரபலமான 56 துகான் என்கிற உணவகத்தினுள்ளே ஐஸ்கிரீமை கையில் வைத்துக்கொண்டு நிற்கும் ராகுலின் அருகே வரும், ஒரு அம்மா தன் மகனை தூக்கிக்கொண்டு வர, அந்த சிறுவனைப் பார்த்ததும் சிரிப்புடன் ஐஸ்கிரீமை உடனே எடுத்து ஸ்பூனால் ஊட்டிவிடும் ராகுல் காந்தியின் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

 

RAHULGANDHI, VIRAL, VIDEO, MADHYAPRADESH

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS