பஞ்சாப் மாநிலம் சார்பில் பஞ்சாப் மாநில லாட்டரி பம்பர்-2018 என்ற லாட்டரி சீட்டுகளுக்கான குலுக்கல் பரிசானது கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சங்ரூர் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்னும் கூலித்தொழிலாளிக்கு 1.5 கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறது.இதன் மூலம் ஒரே நாளில் அவர் கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த லாட்டரி சீட்டை வாங்க பணம் இல்லாததால், தனது நண்பர் ஒருவரிடம் ரூபாய் 200 கடன் வாங்கி மனோஜ் குமார் அந்த லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். 

 

கடன் பெற்று வாங்கிய லாட்டரி சீட்,மனோஜ்குமாரை கோடீஸ்வரர் ஆக்கிவிட்டது. அதிர்ஷ்டம்னா இப்படி இருக்கணும் பாஸ்!

 

BY MANJULA | SEP 6, 2018 8:02 PM #PUNJAB #LOTTERYTICKET #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS