'கஜா புயல் எதிரொலி'..பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை நீக்க உத்தரவு!
Home > தமிழ் newsகஜா புயல் எதிரொலியால் அரசியல்வாதிகள், நிறுவனங்கள் வைத்துள்ள கட்-அவுட்டுகள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு புதுச்சேரி நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் வருகின்ற 15-ம் தேதி இரவு சென்னை-கடலூர் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கஜா புயல் கடலூர்-பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என, சென்னை வானிலை மையம் புதிய தகவலை வெளியிட்டு உள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்கள் வைத்துள்ள கட்-அவுட்டுகள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு நகராட்சிகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
மேலும் சாலைகளில் கட்டுமானப் பொருட்கள் வைத்து இருந்தால், அதனையும் அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- 'கஜா புயல் மிகக்கடுமையாக இருக்கும்'..2015-ம் ஆண்டு போல கனமழை பெய்யும்!
- வர்தா புயல் போன்று வரும் ‘கஜா’ புயல்: தமிழகத்துக்கு ரெட்-அலர்ட்டா?
- ‘சொன்னா கேக்கனும்.. 15 வருஷமா பாக்குற எங்களுக்கு தெரியாதா எப்படி ட்விஸ்ட் அடிக்கும்னு?’:தமிழ்நாடு வெதர்மேன்!
- 1000 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்:கனமழை பாதித்த கோபியில் அமைச்சர் ஆய்வு!
- 'ஜில்லென ஒரு மழைத்துளி'.. சென்னை மக்களை செம ஹேப்பியாக்கிய மழை!
- மீண்டும் தொடங்கிய பருவமழை?.. சென்னை வெதர்மேன் விளக்கம்!
- கோரத்தாண்டவம் ஆடிய டிட்லி:ஆவேசமாக கரையை கடக்கும் வீடியோ!
- கரையை கடக்க காத்திருக்கும் டிட்லி புயல்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
- 'மழை தொடர்பான பதற்ற செய்திகளை'.. வாட்ஸ்அப்பில் பரப்பி பயமுறுத்தாதீர்கள்!
- அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும்