
சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளம்பெண் ஒருவரை அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் பலாத்காரம் செய்ய முயன்ற விடுதியின் காவலாளியை போலீசார் கைது செய்தனர். விடுதி அறையில் தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண் கதவை மூடாமல் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதைப்பயன்படுத்தி காவலாளி சுபாஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. ஆனால் அலறி எழுந்துள்ள அப்பெண் சத்தமாகக் கூச்சலிட்டதால் அதைக்கேட்டு அருகிலிருந்த அனைவரும் ஓடி வந்துள்ளனர்.
ஆனால் சுபாஷ் அதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் செம்மஞ்சேரி போலீசார் அந்த விடுதிக் காவலாளியைக் கண்டுபிடித்து சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது.
BY BEHINDWOODS NEWS BUREAU | JUL 25, 2018 5:09 PM #SHOLINGANALLUR #WOMANMOLESTED #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS