'சச்சின்' எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தாரு...'மீண்டும் களத்திற்கு திரும்பும் அதிரடி வீரர்'!

Home > தமிழ் news
By |

பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட காயத்தினால் ஓய்வில் இருந்த இளம் வீரர் பிரித்வி ஷா,மீண்டும் களத்திற்கு திரும்ப உள்ளார்.

கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா அறிமுகமானார்.தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து,டெஸ்ட் போட்டியில் இளம் வயதிலேயே சதம் அடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைத்தது அசத்தினார்.கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் இந்தியாவிற்கு மீண்டும் ஒரு சச்சின் கிடைத்து விட்டதாக பாராட்டினார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணியுடன் பிரித்வி ஷா சென்றார்.அங்கு நடைபெற இருந்த டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக,ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றது.அப்போது பவுண்டரி கோட்டிற்கு அருகே பீல்டிங் செய்த பிரித்வி ஷா கேட்ச் பிடிக்க முயன்றபோது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.அதன் பின்பு ஓய்வில் இருந்த அவர்,தற்போது பூரணமாக குணமடைந்து விட்டதோடு தற்போது பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே 'சையது முஷ்டாக் அலி' தொடரானது தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான வீரர்கள் பட்டியல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது.அதில் பிரித்வி ஷா இடம் பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக மும்பை பாந்த்ராவில் உள்ள சச்சின் டெண்டுல்கர் இல்லத்துக்குச்சென்ற பிரித்வி ஷா,பேட்டிங் குறித்தும்,மைதானத்தில் காயங்களை தவிர்ப்பது குறித்தும் சச்சினிடம் ஆலோசனை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

CRICKET, BCCI, PRITHVI SHAW, SYED MUSHTAQ ALI TROPHY, SACHIN

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS