பயிற்சியின்போது பலத்த காயம்; டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா பிரபல கிரிக்கெட் வீரர்?
Home > தமிழ் newsவிராட் கோலி தலைமையிலான, இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடுகிறது. தீவிர பயிற்சிகளுக்கு பின் இந்திய வீரர்கள் கலந்துகொண்டுள்ள இந்த போட்டிகளில், முந்தைய மேட்ச், 1-1 என்கிற கணக்கில் டிராவில் முடிந்திருந்தது. இந்த சூழலில், அடுத்தடுத்து இந்திய அணி எதிர்கொள்ள உள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆட்டம் வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் தொடங்கவுள்ளதாக தெரிகிறது.
ஆனால் டெஸ்ட் போட்டிக்கும் முன்பாக, 4 நாட்கள் பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்தியாவுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கும் இடையில் சிட்னியில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணியின் வீரர் பிரித்வி ஷாவின் இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
பந்து, பவுண்டரியை தாண்டிச்செல்லும்போது, ஒரு நல்ல கேட்சை பிடிப்பதற்காக முயற்சித்தபோது, அவருக்கு இவ்வாறு ஏற்பட்டதால், உடனடியாக மைதானத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக தூக்கிச் செல்லப்பட்டார். அதனால் அடிலெய்டியில் நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா விளையாட மாட்டார் என அறியப்படுகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- This popular cricketer pulls off Dhoni's helicopter shot
- Virat Kohli faces criticisms for wearing shorts during toss
- 'புதுசு, புதுசா அவுட் ஆகுறாரு'.. பிரபல வீரரைக் காய்ச்சி எடுத்த பயிற்சியாளர்!
- 'ரெண்டும் வேற வேறங்க.. உங்களுக்கு புரியனும்னா புத்தகம் அனுப்புறேன்’.. ட்ரம்புக்கு பள்ளி மாணவியின் பதிலடி!
- 'யாரு நெனச்ச இடத்துல தூங்குவாங்க'...வைரலாகும் 'இந்திய வீரர்களின் ராப்பிட்-ஃபையர்' வீடியோ!
- 'நீங்க வந்தா மட்டும் போதும்'...இந்திய அணி கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் செய்த செயல்!
- 'அவர் எந்த தப்பும் செய்யல'...உருக்கமான கடிதம் எழுதியிருக்கும் 'பிரபல கிரிக்கெட்' வீரரின் மனைவி!
- கிரிக்கெட் மட்டுமில்ல டென்னிஸும் நல்லா ஆடுவேன்'.. கலக்கும் 'தல' தோனி!
- ’ப்ளீஸ்! இந்த நாட்டு நலனுக்காக, என்ஜினியரிங்க விட்டுடுப்பா’; மாணவனிடம் கெஞ்சிய கோர்ட்!
- அடப்பாவமே! ஃபிளைட் ஓட்டும்போது பைலட் தூங்குறது நியாயமாரே?