"சச்சின்,சேவக் மற்றும் லாரா சேர்த்து செய்த கலவை இவர்": ரவி சாஸ்திரி புகழாரம்!

Home > தமிழ் news
By |

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான பிரித்வீ ஷா, சச்சின்,சேவக் மற்றும் லாரா போன்ற வீரர்களின் கலவை என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

 

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்சில் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

 

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதனையடுத்து  இரண்டாவது இன்னிங்சில் இண்டீஸ் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணிக்கு 72 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

 

இந்நிலையில் எளிதான இலக்கை அடைய இந்திய அணியின் அறிமுக வீரரான பிரித்வீ ஷா, ராகுல் கைகொடுக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி, 75 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.இந்த தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய பிர்த்வீ ஷா, அறிமுக தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற 10வது வீரர் என்ற பெருமை பெற்றார்.

 

இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் "பிரித்வீ ஷா, சச்சின்,சேவக், லாரா போன்ற வீரர்கள் சேர்ந்த கலவையாகும்.தனது 8வது வயதில் இருந்து மும்பை மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவரின் கடின உழைப்பை நான் உணர்ந்திருக்கிறென்.அவர் தனது கடின உழைப்பை,பணிவுடன் நேர்மையாக செயல்படும் பட்சத்தில் பிரித்வீ ஷாவிற்கு மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது.’ என்றார்.

CRICKET, VIRENDHARSHEWAG, PRITHVI SHAW, SACHIN TENDULKAR, BRAIN LARA, RAVI SHASTRI, GLIMPSES

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS