கொலை வழக்கு கைதி ஜெயிலுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள பைசாபாத் என்னும் ஜெயிலில் கொலைக்கைதி ஷிவேந்திர சிங்(40) என்பவர் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஜூலை 23-ம் தேதி தனது 40-வது பிறந்தநாளை ஜெயிலுக்கு வெளியில் வைத்துக் கொண்டாடியுள்ளார்.

 

இதற்காக ஜெயில் அதிகாரி வினய் குமார் என்பவருக்கு ரூ.1 லட்சம் பணத்தை ஷிவேந்திர சிங் அளித்துள்ளார். இந்தநிலையில் சிறை அதிகாரியுடன் இணைந்து இவர் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

 

இதுதொடர்பாக விசாரணை நடத்தக்கோரி உத்தர பிரதேச அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையில் வினய் குமார் தன்னிடம் மாதம் ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் கொடுக்கவில்லை எனில் வீடியோவை வெளியிடுவேன் என  பிளாக்மெயில் செய்ததாகவும் ஷிவேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

 

இந்த வீடியோவை ஊழியர் ஒருவர் வெளியிட்டதாக கூறப்படுகிறது. தற்போது இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS