ஆஞ்சநேயருக்கு துளசிமாலை சாத்திவிட்டு திரும்பிய அர்ச்சகருக்கு நடந்த விபரீதம்!

Home > தமிழ் news
By |

ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் அம்மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

இக்கோவிலில் நேற்று அர்ச்சகர் வெங்கடேஷ் என்பவர், பக்தர் ஒருவர் கொடுத்த துளசி மாலையை அர்ச்சனை செய்துவிட்டு ஆஞ்சநேயருக்கு சாத்திவிட்டு பின்னோக்கி நடந்துள்ளார். உடனே நிலைதடுமாறி தலைகீழாக விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த சக அர்ச்சகர்கள் ஓடிவந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அர்ச்சகர் உயிரிழந்துள்ளார். இதுபோல் சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை எனவும் இதுவே முதல்முறை எனவும் கோவில் நிர்வாக அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

மேலும் அர்ச்சகர் வெங்கடேஷ் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். தனது சகோதரர்  நாகராஜனுக்கு உதவி அர்ச்சராக இருந்து பணியாற்றிய போது எதிர்பாராத விதமாக இந்த சம்பவம்  நடந்ததாக கூறப்படுகிறது.

NAMAKKAL, TEMPLE, ACCIDENT, PRIEST

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS