நம்மூரில் இனிமேல்  மருத்துவ படிப்பு படித்த, பயிற்சி பெற்ற செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்க்க வேண்டும் என்று சில காரணங்களால் அறிவிக்கப்பட்டது. பேறு காலத்தில் பலர் முன்கூட்டியே, குழந்தை பிறப்பதற்கான நிகழ்தகவான தேதியை அறிந்துகொண்டு மருத்துவமனைக்குச் செல்வதுண்டு. குழந்தை பெற்றெடுப்பது என்பது பெண்களுக்கே உரிய சிறப்பாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.

 

மகப்பேறு காலத்தில் கூட பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதுண்டு. சிலர் வீட்டிலேயே இருப்பதுண்டு. உணவு, சீரான மெல்லிய உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை பின் தொடருதல் குழந்தை பெறுவதை எளிதாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு மகப்பேறு காலத்தில் பணிபுரியும் நிறுவனங்களே பேறு கால விடுமுறையும் சிறப்பு ஊதியமும்  அளிக்கின்றன. ஆக, முதல்வரே ஆனாலும் பெண்ணை சிறப்பிக்கும் வல்லமை கொண்டது தூய்மையான தாய்மை. அவ்வகையில் நியூசிலாந்தை சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர் குழந்தை பெற்றெடுக்க, சைக்கிளிலேயே மருத்துவமனைக்கு சென்று,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.


நியூசிலாந்து நாட்டின் போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறையின் அமைச்சர் 38 வயதான ஜூலி ஏனி ஜெண்டர்.  மகப்பேறு காலத்தில் இருந்த இவருக்கு குழந்தை பிறப்புக்கான வலி ஏற்பட்ட உடன், நியூஸிலாந்தின் மருத்துவ குழுவினருடன் காரில் செல்வதற்கு இடம் கிடைக்காததால் சைக்கிளிலேயே மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.   பேறு காலத்தில் சைக்கிள் ஓட்டியபடி மருத்துவமனை சென்று குழந்தை பெற்றெடுத்ததை, ஆரோக்கியமானதாக கருதுவதாக குறிப்பிடுகிறார் ஜூலி. 

BY SIVA SANKAR | AUG 20, 2018 3:45 PM #NEWZEALANDMINISTER #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS