நடனமாடிய கிறிஸ்துமஸ் குழுவின் நடுவே வந்த போலீசார் எடுத்த விநோதமான முடிவு!

Home > தமிழ் news
By |

கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டதால் உலகம் முழுவதும் களைகட்டத் துவங்கியிருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இணையத்தில் வெவ்வேறு விதமாக வைரலாகி வருகின்றன. 

 

இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் பிலோரிடா மாகாணத்தில் உள்ள அவந்துரா மாலில் காவல் துறையினர் நடனமாடிய நிகழ்வுதான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலேயே ட்விட்டரில் வைரலாகும் பெரும் கொண்டாட்டமாக இருக்கிறது. 

 

இந்த மாலுக்கு வந்திருந்த ஃபிளாஷ் மாப் என்கிற வகை நடனத்தை திடீரென ஆடத் தொடங்கி, பார்வையாளர்களிடையே பரவசத்தை உண்டுபண்ணியது. பலரும் அவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த காவல்துறையினரைக் கண்டு அனைவரும் பயந்துள்ளனர். 

 

கிட்டத்தட்ட அந்த நிகழ்ச்சி பொதுமக்களுக்கு தொந்தரவு என்பதால் நிறுத்தச் சொல்ல வந்ததுபோல், அங்கு நுழைந்த காவல்துறையினர், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், அவர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளனர். பின்னர் அனைவருடனும் நடனமாடியது மகிழ்ச்சி என ட்வீட்டும் போட்டுள்ளனர். அந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

 

CHRISTMAS, POLICE, MALL, CELEBRATION, BIZARRE, FALSHMOB

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS