காலில் விழும் 75 வயது மூதாட்டி.. அலட்சியப்படுத்திய இன்ஸ்பெக்டரின் கதி!

Home > தமிழ் news
By |

காலில் விழுந்து அழுதும் வழக்கு பதிவு செய்ய மறுத்த இன்ஸ்பெக்டரை உத்திரபிரதேச அரசு  சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

பிரம்மாதேவி என்கிற 75 வயது மதிக்கத்தக்க பெண் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவிற்கு அருகில் குடம்பா என்னுமிடத்தில் வசித்து வருகிறார். இவருடைய பேரன் ஆகாஷ்(20) அப்பகுதியிலுள்ள பிளைவுட் ஃபேக்டரியில் பணியாற்றி வந்துள்ளார். ஆகாஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக மெஷினில் சிக்கி உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.

இதனையடுத்து ஃபேக்டரியின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை.இதனையடுத்து ஆகாஷின் பாட்டி பிரம்மாதேவி காவல் நிலையத்திற்கு நேரில் சென்றுள்ளார். அங்கு இன்ஸ்பெக்டர் தேஜ் பிரகாஷ் சிங் நாற்காலியில் கால்மேல் கால் போட்டு, அமர்ந்துகொண்டு பிரம்மாதேவியை அலட்சியப்படுத்தி இழிவாக நடத்தியுள்ளார். 

உடனே பிரம்மாதேவி கண்ணீர் மல்க கை எடுத்து கும்பிட்டு,காலில் விழுந்து வழக்கைப் பதிவு செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனாலும் இன்ஸ்பெக்டர் வழக்கை பதிவு செய்ய முடியாது என மறுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலத்த கண்டங்களுக்கு உள்ளாகியது. இதனைத் தொடர்ந்து உத்திரபிரதேச அரசு இன்ஸ்பெக்டர் தேஜ் பிரகாஷ் சிங்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

UTTAR PRADESH, INSPECTOR, SUSPEND, VIRAL

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS