அதிமுக- பாமக கூட்டணி.. யாருக்கு எத்தனை தொகுதிகள்?.. பரபரப்பாகும் தேர்தல்களம்!

Home > தமிழ் news
By |

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அதிமுகவை, பாமக சந்தித்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் இருவரும், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலுக்கு வருகை தந்தனர்.

ஹோட்டலுக்கு வருகை தந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவருக்கும் பொன்னாடை போற்றி முதல்வர் பழனிசாமி வரவேற்றார். பின்னர் அதிமுகவுடனான  கூட்டணி ஒப்பந்தத்தில் பாமக கையெழுத்திட்டுள்ளது.  இந்த ஒப்பந்தத்தின் போது, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், அதிமுக - பாமக கூட்டணி கையெழுத்தாகிய நிலையில், பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். முன்னதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சென்னைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகிருந்தன. இதனால் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி பற்றிய முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக-பாமக கூட்டணி உறுதியாகியுள்ளது. 

இதுகுறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 40 தொகுதிகளிலும் அதிமுக- பாமக கூட்டணி வெற்றி பெறும் என்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 21 தொகுதி இடைத் தேர்தலில் தங்களது ஆதரவு அதிமுகவுக்கு அளிக்கப்படுவதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

AIADMK, EDAPPADIKPALANISWAMI, OPANNEERSELVAM, PMK, LOKSABHAELECTIONS2019

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS