‘அந்த ஆப்’ யூஸ் பண்றவங்க குற்றவுணர்ச்சி இல்லாத அடிமைகள்!

Home > தமிழ் news
By |

சமூக வலைதளங்களில் முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் டிக்டொக், இன்றைய இளைய தலைமுறையினர், வீட்டு பெண்கள், கல்லூரி மாணவர்கள் என பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஆனால் இதுபோன்ற செயலிகள் இளைஞர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதற்கு பதிலாக அவர்களை சீரழிக்கும் சக்தியாகவும், அவர்களின் ஒழுங்கான வாழ்க்கையை கெடுக்கும் விதமாகவும் மாறிவருவதால், டிக் டொக் செயலியை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

சீனாவில் பைட் டான்ஸ் என்கிற நிறுவனத்தால் மியூசிக்கலி என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, பின்னர் டிக்டொக் பென்கிற பெயரில் பரவலானது. தொடக்கத்தில் மக்கள் தங்கள் ஆடல், பாடல் திறமைகளை 15 நொடிகளுக்குள் வெளிப்படுத்த உதவிய இந்த செயலியால், தற்போது பலரும் தவறான வழிகளில் செல்வதாகவும், ஓவியம் வரையும் முயற்சி கிறுக்கலாக மாறிப் போனதை போல ஆபாச தளமாக டிக்டொக் மாறிவிட்டதாகவும் கூறும் ராமதாஸ், இந்த செயலி சமூகத்தை பாழாக்கும் என்கிற குற்றவுணர்ச்சி இதனை பயன்படுத்தும், அடிமைகளுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

 

இந்தியாவை பொறுத்தவரை அனைவரையும் பார்க்கத் தூண்டும் பதிவுகளை பலர் பதிவிடுவதாகவும், அதில் 40 சதவீதம் பேர் பதின்பருவத்தினர் என்றும் கூறியுள்ள ராமதாஸ் 12 வயதுக்குட்பட்டவர்கள் கைகளில் இந்த செயலி போய்ச் சேருவதால் இது சமூகத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.

 

ஆனால் இந்தோனேஷியாவில் இந்த செயலியை தடைசெய்த பின்னர், டிக்டொக் நிறுவனம் அளித்த உத்தரவாதத்தின் பேரில் தடை நீக்கப்பட்டது. இதேபோல் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இந்த செயலி கடுமையான கண்காணிக்கப்படுகிறது. இதேபோல் தமிழ்நாடு அரசும் இதுகுறித்த ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

TIKTOK, TNGOVT, RAMDOSS, YOUNGSTERS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS