'என்ன.. பய பப்ஜி விளையாடுறானா?’.. சிரிக்கவைத்த மோடி.. தெறிக்கவிடும் பதில்!

Home > தமிழ் news
By |

பப்ஜி விளையாடும் குழந்தைகளை அதில் இருந்து எவ்வாறு விடுவிக்கலாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ள பதில் இணையத்தில் சக்கை போடுபோட்டு வைரலாகி வருகிறது.

Pariksha Pe Charcha என்கிற பெயரில் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களை மோட்டிவேட் செய்து பேசி வருகிறார் பிரதமர் மோடி. ஆங்காங்கே மத்திய அரசின் சார்பில் கல்வி அதிகாரிகள் பலரும் மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் பேசி வருகின்றனர். 

இந்நிலையில் டெல்லியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்தும் மற்றும் சவூதி அரேபியா, ரஷ்யா, ஈரான், நேபாளம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் சுமார் 2000 மாணவர்கள்  கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் உரையாடினர். மாணவர்கள் மட்டுமல்லாது மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, மாணவர்களை வழிநடத்துவது உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி உரையாடினர்.

அதில் ஒரு பெண்மணி ஒரு மாணவரின் பெற்றோர் என்கிற முறையில் பிரதமர் மோடியிடம் பேச அனுமதி கேட்டார். அப்போது அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது அந்த பெண்மணி, தன் மகன் நீண்ட நேரம் ஆன்லைன் விளையாட்டுகளை ஸ்மார்ட்போன்களில் விளையாடிக் கொண்டே இருப்பதால் அவனால் பாடத்தில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்த முடிவதில்லை. சொன்னாலும் கேட்பதில்லை. இந்த பிரச்சனையை எப்படி சரி செய்ய? என்று கேட்டதற்கு, இதற்கு மோடி, ‘அப்படி என்ன விளையாடுகிறான்? பப்ஜி கேமா?’என்று கேட்டதுமே அரங்கம் அதிர அனைவரும் சிரித்துள்ளனர்.

இதனை அடுத்து இதற்கு பதில் கூறும் விதமாக, நம் குழந்தைகள் டெக்னாலஜிக்கு அடிமையாகிவிடுகிறார்கள் என எண்ணி, அவர்களை அவற்றிடம் விலக்கி வைக்கும்போது அவர்களை இந்த உலகத்தின் மாற்றங்களில் இருந்து தள்ளிவைப்பதாக அர்த்தம். என்னதான் டெக்னாலஜி வந்தாலும், குழந்தைகள் அவற்றை எதற்கு அல்லது எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் அவர்களுக்குச் சொல்லிக்கொடுத்து நண்பராக உரையாடினால் அவர்களும் தயக்கமில்லாமல் உங்களிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வார்கள். டெக்னாலஜிக்கு அடிமையாவதில் இருந்து தவிர்க்க, அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். கட்டுப்படுத்தாதீர்கள் என்று கூறினார்.

மேலும், கூடுதலாக, ‘இப்போது நான் பேசும்போது கூட பலர் என்னை கவனித்துக்கொண்டும் சிலர் நான் பேசுவதை நண்பர்களுக்கு அப்டேட் செய்துகொண்டும் இருக்கின்றனர்’ என்று கூறினார்.

NARENDRAMODI, BJP, PUBG, PARIKSHAPECHARCHA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS