'டேபிளில் பணம் எடுத்து வைத்தும், மோடியின் வங்கிகள் வாங்க மறுக்கின்றன'..மல்லையா!

Home > News Shots > தமிழ் news
By |

நான் டேபிளில் எடுத்து வைத்த ரூ.9000 கோடி கடனை இந்திய வங்கிகள் பெற மறுக்கின்றன என விஜய் மல்லையா பிரதமர் மோடியிடம் விவாதித்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரதமர் மோடி நேற்று நடந்த மக்களவை கூட்டத்தொடரில், இந்திய வங்கிகளில் கடன் வாங்கி பின்னர், மோசடி செய்துவிட்டு இங்கிலாந்துக்கு தப்பிச்சென்ற தொழிலதிபர்களின் விவகாரத்தைப் பற்றி சூசகமாக பேசினார்.

ஆனால் அந்த உரையில் விஜய் மல்லையாவின் பெயரினை குறிப்பிட்டு பேசவில்லை, இருந்தாலும் இந்த உரை விஜய் மல்லையாவின் பார்வைக்கு சென்றுள்ளது. அதன்பிறகு இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டரில், ‘நான் பணத்தை ஏமாற்றிவிட்டு தப்பித்து இங்கிலாந்து ஓடிவிட்டதாக ஊடகங்கள் தவறான செய்தி பரப்பி வருவதை காணும்பொழுது ஆச்சரியமாக உள்ளது. அப்படி நான் தப்பித்து ஓடிவரும் எண்ணத்தில் இருந்தால் நீதிமன்றத்தில் எனது பெயரிலான சொத்துக்கள் ரூ.14000 கோடி இருப்பதாக அறிவித்திருப்பேனா?’ என்று மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தான் கொடுக்க வேண்டிய கடன் பணத்தை டேபிள் மீது எடுத்து வைத்த பின்னும், எந்த வங்கிகளும் அதனைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என்றும், அதனை வாங்கிக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு மோடி அறிவுறுத்தியிருந்தால் கிங்ஃபிஷர் பெற்ற மொத்த கடனையும் இந்திய பொதுத்துறை வங்கிகளுக்கு திரும்பப் பெற்றுக்கொடுத்த பெருமை மோடிக்கு கிடைத்திருக்கும் என்றும் ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார் விஜய் மல்லையா.

இந்த ட்வீட் தற்போது பலரை வியப்பில் ஆழ்த்தியதோடு பலருக்கும் பலவிதமான குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.

NARENDRAMODI, VIJAY MALLYA, PRIME MINISTER, BANK, LOAN, MONEY, TWEET

OTHER NEWS SHOTS

RELATED NEWS STORIES