பாகிஸ்தானின் அதிபராக வரும் ஆகஸ்ட் 11ம் தேதி பதவியேற்க உள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கான். இஸ்லாமாபாத்தின் மம்மூன் ஹீசைன் அதிபர் மாளிகையில் நடக்கவுள்ள இந்த பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 12ம் தேதி அங்கு பிணைக்கைதிகளாக உள்ள இந்திய மீனவர்கள் 27 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் சுதந்திர நாளான ஆகஸ்ட் 14ம் தேதி அவர்கள் வாஹா எல்லையின் வழியாக இந்தியாவுக்குள் வருவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பிரதமர் வேட்பாளராக பதவியேற்கவுள்ள இம்ரான் கான், தனது நீண்ட நாள் சபதங்கள் சிலவற்றை அதிரடியாகச் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் முதலாவதாக அவர் எடுத்துக்கொண்ட சபதம், பிரதமர் மாளிகையை ஏழை-எளிய மக்களின் பொதுக் கல்வி மையமாக மாற்ற வேண்டும் என்பதுதான்.
முன்னதாக பாகிஸ்தானில் 12-க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் தீவிபத்துக்கள் ஏற்பட்டதால் பல மாணவர்கள் படிக்க முடியாத சூழல் உண்டாகியது. இதுபோன்ற செயல்களைத் தவிர்க்கவும், தற்போதைய அவசர காலத் திட்டமாக பிரதமர் மாளிகையை கல்வி மையமாக மாற்றவும் முயற்சித்து வரும் இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் மக்களின் ஆதரவுக் கரங்கள் கூடுயிருக்கின்றன.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Pak ex-PM Nawaz Sharif awarded 10-years prison time for corruption
- Minor boy from Pakistan crosses into India, sent back home with sweets
- எல்லை தாண்டி வந்த 'பாகிஸ்தான்' சிறுவனுக்கு... 'இந்திய ராணுவம்' என்ன கொடுத்தது தெரியுமா?
- ஒரிஜினல் 'சிங்கத்தை' வீட்டில் வளர்க்கும் கிரிக்கெட் வீரர்
- பிறந்தநாள் 'கேக்' வெட்டியதற்கு ரசிகர்களிடம் 'மன்னிப்பு' கேட்ட கிரிக்கெட் வீரர்!
- 'ஆப்பிள் வாட்ச்' அணிய கிரிக்கெட் வீரர்களுக்கு தடை
- 12 arrested for ordering ‘revenge rape’ of alleged rapist’s sister
- செய்தி வாசிப்பாளரான திருநங்கை!
- Stylish beards banned in this place
- Historic moment for the Pakistan senate