’ப்ளீஸ்! இந்த நாட்டு நலனுக்காக, என்ஜினியரிங்க விட்டுடுப்பா’; மாணவனிடம் கெஞ்சிய கோர்ட்!

Home > தமிழ் news
By |

சண்டிகாரின் குருஷேக்திரத்தில் பயிலும் NIT மாணவரை தயவு செய்து பொறியியல் படிப்பை தொடர்வதை கைவிடச் சொல்லி, நீதிமன்றமும் நீதிபதியும் கெஞ்சி கேட்டுக்கொண்டுள்ள சம்பவம் இணையத்தில் நெட்டிசன்களிடையே வைரலாகியுள்ளதோடு அனைத்து என்ஜினியர்களின் கவனத்தை திசை திருப்பியுள்ளது. 

 

மேற்கண்ட கல்லூரியில் என்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்த மாணவர் ஒருவர், கடந்த 2009-ஆம் ஆண்டு படிப்பைத் தொடங்கினார். ஆனால் அடுத்து, நான்கு வருடங்களில் நிறைய செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாமல் 17 அரியர்களை வைத்துள்ளார். எனினும் படிப்பு முடிந்து மேற்கொண்டு 4 வருடங்கள் ஆன நிலையில், இன்னமும் அரியர் எக்ஸாம் எனப்படும் கம்பேர்ட்டிபிள் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகிறார். 

 

இது தொடர்பாக அந்த மாணவர் நீதிமன்றத்தில் மனு அளித்து உத்தரவு வாங்க வேண்டியிருந்த சூழலில், இந்த மனுவை விசாரித்த சண்டிகார் நீதிமன்ற நீதிபதிகள், ‘நீங்கள் ஒரு என்ஜினியரின் இடத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறீர். இந்த 9 வருடமாக இந்த அரியர்களை க்ளியர் செய்ய முடியாதவர், இந்த வருடம் மட்டும் எப்படி க்ளியர் செய்யப்போகிறீர்? இதற்கு ஒரு end கிடையாதா?’ என கேட்டுவிட்டு, ‘தயவு செய்து நீங்கள் இந்த பொறியியல் படிப்பைத் துறந்துவிட்டு வேறு ஏதேனும் செய்தாலே பொறியியல் படிப்பையும் இந்த நாட்டையும் நீங்கள் காப்பாற்றலாம்.. அதைச் செய்யுங்கள் ப்ளீஸ்’ என்று கடுமையாக பேசியும் கெஞ்சியும் அவருக்கு அறிவுரை கூறிவிட்டு, அவரது மனுவை நிராகரித்துள்ளனர். 

EXAM, COLLEGESTUDENT, BIZARRE, INDIA, CHANDIGARH, HIGHCOURT, ENGINEERING, APPEAL, ARREAR, COMPARTMENT EXAMS, SAVETHECOUNTRY, DEGREE, EDUCATION

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS