பீட்சாவில் எச்சில் உமிழ்ந்து டெலிவரி:அதிர்ச்சியளிக்கும் வீடியோ!

Home > தமிழ் news
By |

தற்போது இணையத்தில் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கம் மக்களிடம் அதிகரித்து வருகிறது.அதே நேரத்தில் ஆர்டர் செய்யப்படும் உணவை கொண்டு வந்து சேர்க்கும் டெலிவரி நபர்கள் மீது அவ்வப்போது பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.உணவை பிரித்து சாப்பிடுவது,உணவை திறந்து பார்ப்பது என பல சம்பவங்கள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது.இதற்கெல்லாம் ஒரு படி மேலே வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பீட்சாவில் எச்சில் உமிழ்ந்து அதை செல்ஃபி எடுத்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

 

துருக்கியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் புராக், பிரபல பீட்சா நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார்.இவர், கடந்த ஏப்ரல் மாதம் வாடிக்கையாளருக்கு விநியோகிக்கவேண்டிய பீட்சாவில் எச்சில் உமிழ்ந்து, அதை செல்ஃபியும் எடுத்துள்ளார்.  இதை அதே குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் பார்த்துவிட்டார். மேலும், இந்தக் காட்சிகள் வாடிக்கையாளரின் அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி கேமராவிலும் பதிவாகிவிட்டன.  அதையடுத்து, அந்த வாடிக்கையாளர் அவரின் வீட்டின் வெளியே பதிவான சிசிடிவி காட்சிகளைப் பார்த்து ஆத்திரமடைந்து, புராக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

 

இதனையடுத்து புராகை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.அவரிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி என்ன காரணத்திற்காக இவ்வாறு நடந்து கொண்டாய் என புராகிடம் கேட்டார்.அதற்கு பதிலளித்த புராக் `என் நண்பர் கடந்த வாரம் அதே வாடிக்கையாளர் வீட்டுக்கு பீட்சா டெலிவரி செய்தார்.

 

அதைப் பெற்றுக்கொண்ட அந்த வாடிக்கையாளர், பீட்சா சூடாக இல்லை என்று என் நண்பரை மிகவும்  தரக் குறைவாகப் பேசியதோடு அவரிடம்  சண்டையும் போட்டார். என் நண்பரின் வேலை பறிபோகும் அளவுக்குப் புகாரும் கொடுத்தார். எனவே, இம்முறையும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக, பீட்சா சூடாக இருக்கிறதா என்பதைச் சோதிக்கவே திறந்து பார்த்தேன். ஆனால், பீட்சாவில் நான் எச்சில் துப்பவில்லை; பீட்சாவுடன் செல்ஃபி மட்டுமே எடுத்தேன்’ என்றார்.

 

ஆனால் புராக் கூறிய வாக்குமூலத்தில்  உண்மை இல்லை என்று தெரிவித்த நீதிபதி,அவருக்கு 18 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

PIZZA, TURKEY, DELIVERY BOY

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS