"தீப்பிழம்பை கக்கும் அதிபயங்கர எரிமலை"...புகைப்பட நிபுணரிடம் சிக்கிய வீடியோ காட்சிகள்!

Home > தமிழ் news
By |

சுமத்திரா பகுதியில் அவ்வப்போது எரிமலை வெடிப்புகள் நிகழ்வது வழக்கம்.தற்போதுள்ள எரிமலைகளிலேயே அபாயகரமானதாக கருதப்படுவது,சுமத்திரா மற்றும் இந்தோனேஷியா தீவுக்கு நடுவில் உள்ள கிரக்கத்தோவா எரிமலை. இந்த எரிமலை அவ்வப்போது நெருப்புக் குழம்புகளை விசிறியடித்து வருகிறது.

 

கிரக்கத்தோவா எரிமலையின் தாக்கம் பல கிலோ மீட்டர் தாண்டியும் இருக்கும்.இதனால் அது நெருப்பு பிழம்புகளை கக்கும் போது அதனை வீடியோ எடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ரிச்சர்ட் ரோஸ்கோ என்பவர் இந்த எரிமலையின் திடீர் வெடிப்பை பதிவு செய்துள்ளார்.

 

எரிமலையானது தனது ஆக்ரோஷமான நெருப்பு பிழம்புகளை வெளியேற்றும் காட்சிகளை,அவர் அற்புதமாக படம் பிடித்துள்ளார்.அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

KRAKATAU VOLCANO, RICHARD ROSCOE, INDONESIAN

OTHER NEWS SHOTS