மெரினாவில் போராட்டம் நடத்துவது தொடர்பான அனுமதி வழங்குவது குறித்த இறுதி தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று முன்னதாக கூறப்பட்டிருந்தது. அய்யாக்கண்ணு என்பவர் தொடங்கிய இவ்வழக்கில், காவிரி பிரச்சனை தொடர்பான  ஒருநாள் போராட்டத்தை மெரினாவில் நடத்துவதற்கு அனுமதி கேட்டும் கோரியிருந்தார்.மேலும் சுதந்திர தினம் தொட்டே, 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு வரை  பெரும் போராட்டக் களமாக மாறிவிட்ட மெரினாவில் தற்போது 144 தடை உத்தரவு நீடித்தே வருகிறது. மீறி போராடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர் என்பனவற்றை குறிப்பிட்டு மனுக்களும் அளிக்கப்பட்டன.

 

முன்னதாக மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்படவியலாது என்று தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது.  இவ்வழக்கின் முதல் கோரிக்கையை ஏற்று ஒருநாள் போராட்டத்துக்கு அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவினை ரத்து செய்து தற்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

இந்த நிலையில், போராட்டம் நடத்தக் கோரி அளிக்கப்பட்ட மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையினரின் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு இதில் அடங்கியுள்ளதால் மெரினாவில் போராட்டங்களை நடத்துவதற்கான அனுமதிகளை ரத்து செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

BY SIVA SANKAR | SEP 3, 2018 11:14 AM #MADRASHIGHCOURT #MARINAPROTESTS #MARINA PROTEST #TAMILNADU #CHENNAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS