தனியார் பேருந்தினை ஊரே ஒன்று கூடி கொளுத்திய பரபரப்பு சம்பவம்!
Home > தமிழ் newsநடந்த ஒரு பேருந்து விபத்தால், உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஒரு பேருந்தையே ஊர் மக்கள் கொளுத்தியதாக பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்-ஆப்பிலும் பேஸ்புக்கிலும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
சேலம் மாவட்டம் கருமாந்துறை அருகே சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக வாலிபர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அந்த ஊர் பொதுமக்கள் பேருந்தை சுற்றி வளைத்துள்ளனர்.
சேலம் முதல் பேளூர் வழியாக கருமாந்துறை வரை செல்லும் வழித்தடத்தில் இயங்கும் அந்த தனியார் பேருந்து தங்கள் ஊர் வாலிபர் மீது மோதியதால் அந்த வாலிபர் பலியானதை தாங்கிக்கொள்ள முடியாததால், வெகுண்டெழுந்த அந்த மக்கள் திரளென சாலைக்கு வந்து, ஒரு பெரும் கூட்டமாக நின்று பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து, பேருந்தின் பக்கவாட்டில் அடித்து நொறுக்கி, டயர்களை நாசம் செய்து பின்னர் பேருந்தை தீவைத்து கொளுத்துவதை அந்த வீடியோவில் காண முடிகிறது.
ஆனால் உண்மையில் தவறு யார் மீது, சண்டை எப்படி தொடங்கியது, ஓட்டுநர் மற்றும் இயக்குநர்கள் எங்கு சென்றார்கள் என்பன போன்ற பல தகவல்களுடன் கூடிய ஆதாரப்பூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை. எனினும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு, வகுப்பறையில் தலைமை ஆசிரியர் பார்த்த வேலை!
- வேதாந்தா, பசுமைத் தீர்ப்பாயம் இரண்டுக்கும் எதிரான ஒரே தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் அதிரடி!
- ‘திடீரென தீப்பிடித்த பேருந்து, ஓட்டுநரின் முடிவால் உயிர் தப்பிய பயணிகள்’..சென்னையில் பரபரப்பு!
- ‘டிக் டாக் தடையா?’..அதிரடி அறிவிப்பை வெளியிட்ட டிக் டாக் நிறுவனம்!
- பந்துவீச்சில் சாதனைக்கு முயன்ற மாணவர்.. பேட்டை ஸ்டைலாக சுழற்றி ஆடும் அமைச்சர்!
- 'மீண்டும் டிரெண்டாகும் சின்னத்தம்பி ஹேஷ்டேக்'..காரணம் என்ன?
- பலரின் மனம் கவர்ந்த டிக்-டாக் விடைபெறுகிறதா?.. சட்டசபையில் நடந்தது என்ன?
- தாறுமாறாக ஓடிய ஜீப், கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!
- கும்கி யானைகளை தலைதெறிக்க ஓடவிட்ட காட்டுயானை ‘சின்னதம்பி’.. வைரல் போட்டோ!
- விபத்துக்குள்ளான திமுக பிரமுகருக்கு அதிமுக அமைச்சர்கள் உதவி.. நெகிழ வைத்த செயல்!