‘எனக்கு துணையாக இருப்பார்’.. நீண்ட நாள் தோழியை மணந்த பின் ஹர்திக் பேட்டி!

Home > தமிழ் news
By |

படேல் சமூகத்துக்கு குரல் கொடுத்துவரும் ஹர்திக் படேல் தனது நீண்ட நாள் தோழியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினருக்கு இட ஓதுக்கீடு கேட்டு போராடி வருபவர் ஹர்திக் படேல். கடந்த 2015-ஆம் ஆண்டு படேல் நடத்திய பெரும் போராட்டத்தின் மூலமாக வெளிச்சத்துக்கு வந்த இவர் தற்போது தனது வாழ்க்கையின் முக்கிய முடிவாக  தோழியை திருமணம் செய்துள்ளார்.

25 வயதேயான ஹர்திக் படேல் தனது பால்ய தோழியான கிஞ்சல் பரிக் என்பவரைத்தான் திருமணம் செய்துள்ளார். பட்டியல் இன மக்கள் என்று சொல்லக்கூடிய பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ள ஹர்திக் படேலின் குடும்பத்தாரின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்துள்ளது.

குஜராத்தின் சுரேந்திராநகர் மாவட்டம், திக்சார் கிராமத்தில் வைதீக முறையில் நெருங்கிய உறவினர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். அதுமட்டுமல்லாமல், அகமதாபாத்தில் திருமண வரவேற்பு நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து பட்டியல் இன மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்துவந்த ஹர்திக் படேலுக்கு போராட்டமே வாழ்க்கையாக இருப்பதால் அவருக்கு தானும் உறுதுணையாக இருப்பேன் என்று அவரது காதலியும் மனைவியுமான கிஞ்சல் பரிக் கூறியதாக ஹர்திக் படேல் பேட்டியளித்துள்ளார்.

ஹர்திக்கின் சகோதரி மோனிகாவுடன் படித்தவர்தான் கிஞ்சல் பரிக் என்பதும், அதன் பின் ஹர்திக் படேலுக்கும் கிஞ்சப் பரிக்-க்கும் புரிதல் உண்டாகி தற்போது திருமணத்தை அடைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

HARDIKPATEL, MARRIAGE, INDIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS