மும்பை-ஜெய்பூர் செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் உள் அறை அழுத்த பராமரிப்புக்கென்று ஒரு கட்டுப்பாட்டு ஸ்விட்ச் இருப்பது வழக்கம். விமானத்துக்குள் இருக்கும் காற்றும், விமானத்துக்கு வெளியே இருக்கும் காற்றும் சரிவிகிதத்தில் பராமரிக்காவிடின் பயணிகளுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

 

ஆனால் கவனமாக இருக்க வேண்டிய பணிப்பெண்களோ அறை அழுத்த பராமரிப்புக்கான ஸ்விட்சை, அழுத்த மறந்ததால் பெரும் பிரச்சனை உண்டாகியுள்ளது. 

 

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது இவ்வாறு கவனக்குறைவாக இருந்ததாலும்,  சரிவிகிதத்தில் காற்றழுத்தத்தை பராமரிக்காததாலும், ஏறக்குறைய விமானத்தில் பயணித்த, 166 பயணிகளில் கிட்டத்தட்ட 30 பேருக்கு காது மற்றும் மூக்கு பகுதியில் ரத்தம் வந்ததாக வந்த புகாரை அடுத்து மீண்டும் மும்பையில் விமானம்  தரையிறங்கியது.

BY SIVA SANKAR | SEP 20, 2018 12:49 PM #FLIGHT #JETAIRWAYS #NOSEBLEEDS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS