முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு இவ்வுலகை விட்டு மறைந்தார். தொடர்ந்து ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல் நேற்று மாலை முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

இந்தநிலையில் மறைந்த கலைஞர் அவர்களுக்கு  இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு பெருமை கிடைத்துள்ளது. அது என்னவென்றால் வரலாற்றிலேயே முதன்முறையாக எம்.பி-யாகவோ அல்லது முன்னாள் எம்.பி-யாகவோ இல்லாத ஒருவருக்காக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டு இரங்கல் வாசிக்கப்பட்டது. பின்னர் அவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 

இதற்கு முன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும், எம்.பி-யாக இருந்தவருக்கும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது இல்லை. ஆனால், நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாகக் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS