கேமராவை பார்த்தால் நானும் போஸ் கொடுப்பேன்...பனிச்சிறுத்தையின் கியூட்டான வீடியோ!

Home > தமிழ் news
By |

இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள பாரடைஸ் உயிரியல் பூங்காவில் தூங்கி கொண்டிருந்த பனிச்சிறுத்தை ஒன்று தூங்கியெழும் போது திடீரென கேமராவை பார்த்ததும் கியூட்டாக  போஸ் கொடுத்த வீடியோ காட்சிகளை பூங்கா நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.

 

விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் தினந்தோறும் அதன் நடவடிக்கைகளை ஆராய்வதற்காக வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.இந்நிலையில் அதன் தரம் தற்போது மேம்படுத்தப்பட்டது. அப்போது பூங்காவில் இருக்கும் 4வயது மதிக்கத்தக்க ஜெஸ்ஸி என்ற பனிச்சிறுத்தை அனைவருக்கும் செல்ல குழந்தையாகும்.

 

ஜெஸ்ஸியின் சுட்டிதனத்திற்கு பூங்கா பணியாளர்கள் மட்டுமல்லாது பூங்காவை பார்வையிட வரும் பார்வையாளர்களும் பெரிய ரசிகர்களாகும்.இந்நிலையில் புதிதாக பொருத்தப்பட்ட கேமராக்கள் விலங்குகளின் நடவடிக்கைகளை ரெகார்ட்  செய்து கொண்டிருந்தது.

 

அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஜெஸ்ஸியின் பக்கம் கேமரா திரும்பியது.அதை பார்த்ததும் ஷாக்கில் திரும்பி கியூட்டாக சில செய்கைகளை செய்தது.அந்த காட்சிகளை பூங்கா நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது.அது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

PARADISE WILDLIFE PARK, SNOW LEOPARD

OTHER NEWS SHOTS