‘இவர் ஒரு ஆரோக்கியமான தலைவலி’..இந்திய கிரிக்கெட் வீரர் குறித்து பேசிய தேர்வு குழுத் தலைவர்!
Home > News Shots > தமிழ் newsஉலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட், விஜய் சங்கர், ரஹானே ஆகியோர் இடம்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 30 -ஆம் தேதியில் இருந்து நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு நாட்டு அணிகள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை நிகழ்த்தியது. இதில் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு சில இளம் வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், உலகக் கோப்பைப் போட்டிக்கான 15 பேர் கொண்ட உத்தேச அணியை தோராயமாக முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்திய அணியின் இளம் வீரர்களின் முந்தைய ஆட்டங்கள் குறித்தும் உலகக் கோப்பையில் அவர்களின் இடம் குறித்தும் பேசியுள்ளார்.
அதில் எம்.எஸ்.கே.பிரசாத் பேசியதாவது, ‘உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட்டை கவனத்தில் வைத்துள்ளோம், கடந்த ஒரு வருடமாக டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். ரிஷப் பண்ட் ஒரு ‘ஆரோக்கியமான தலைவலி’ என இளம் வீரர் ரிஷப் பண்ட் குறித்து பேசியுள்ளார்.
மேலும்,‘ரஹானே உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறார். அதேபோல் விஜய் சங்கரும் கிடைக்கு வாய்ப்புகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் கவனத்தில் உள்ளனர்’ என இந்திய அணியின் தேர்வு குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.
OTHER NEWS SHOTS
RELATED NEWS STORIES
- ‘இந்தியா பலத்துடன் வரும் என தெரியும்’..வெற்றி குறித்து மனம் திறந்த நியூஸிலாந்து கேப்டன்!
- எங்க போனாலும் ‘தல’தான் மாஸ்.. ரசிகரின் உருக்கம்.. தோனி நெகிழ்ச்சி.. சிலிர்க்க வைக்கும் வீடியோ!
- அதிரடி காட்டிய நியூஸிலாந்து வீரர், அடிச்சு தூக்கிய ‘தல’தோனி.. வைரல் வீடியோ!
- நியூஸிலாந்து வீரரை பின்னுக்கு தள்ளி உலக சாதனை படைத்த ‘ஹிட்மேன்’!
- மிரட்டிய இளம் வீரர், கைகொடுத்த பாண்ட்யா...அபார வெற்றியடைந்த இந்தியா!
- 'ஐபிஎல் போட்டிக்கு வந்திருக்கும் சிக்கல்'...இந்திய வீரர்கள் விளையாடுவார்களா?
- இவங்க ரெண்டு பேரும் இந்திய அணியோட பொக்கிஷம்'...புகழ்ந்து தள்ளிய கடவுள்!
- 'T20 கிரிக்கெட்டிற்கு குட்பை சொல்ல போகும் பிரபலம்'...அதிர்ச்சியில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்!
- 'அட ச்சே'...இதெல்லாம் எவ்வளவு கேவலமான காரணம்'...தடை குறித்து கொதித்தெழுந்த வீரர்கள்!
- 'தோல்வியடைய இதெல்லாம் காரணமா இருக்குமா'...தோல்வி குறித்து இந்திய வீரரின் ஓபன் டாக்!