Watch Video: 'கப்பை' எடுத்துக்கொண்டு 'செக்கை' தூக்கி எறிந்த கேப்டன்!

Home > தமிழ் news
By |

தொடரை வென்ற மகிழ்ச்சியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் செய்த செயல், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

 

துபாயில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை வீழ்த்தியது. 49 ஆண்டுகளுக்குப்பின் பாகிஸ்தானை அணியை அயல் மண்ணில் வைத்து நியூசிலாந்து வீழ்த்தியதால், இந்த வெற்றி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக கருதப்படுகிறது.

 

வெற்றியை அடுத்து கோப்பை வழங்கும் நிகழ்வு நடந்தது. அப்போது  வர்ணனையாளர், போட்டியை நடத்திய விளம்பரதாரர்களிடம் கேன் வில்லியம்சனிடம் கோப்பை வழங்குமாறு கூறினார்.ஆனால், அவர் கூறியதை கேட்காமல் வில்லியம்சன் அவராகக் கோப்பையை எடுத்துச் சென்றுவிட்டார்.

 

தொடர்ந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கும்போது வீரர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை அட்டையை ஓரமாகத் தூக்கி எறிந்துவிட்டார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.வில்லியம்சனின் செயலை பல்வேறு தரப்பினரும்  கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS