மோசமா பந்து வீசுனா.. அரை மணி நேரத்துல 2 லட்சம் டாலர் ரூம்ல இருக்கும்!

Home > தமிழ் news
By |

மோசமாக பந்து வீசினால் அரை மணி நேரத்தில் 2 லட்சம் டாலர் உன் அறையில் இருக்கும் என பாகிஸ்தான் வீரர் தனக்கு ஆசை காட்டியதாக, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தெரிவித்து இருக்கிறார்.

 

'நோ ஸ்பின்' என்ற தலைப்பில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே எழுதி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் என்டிடிவி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,'' 1994-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பாகிஸ்தான் கேப்டன் சலீம் மாலிக் போட்டியை டிரா செய்யுமாறும், பந்துகளை ஆஃப் - ஸ்டம்புக்கு வெளியே வீசுமாறும் கூறினார். அப்படி செய்தால் அடுத்த அரை மணி நேரத்தில் அறையில் சுமார் 2,00,000 டாலர்கள் இருக்கும் என உறுதி அளித்தார்.ஆனால் நான் மறுத்து விட்டேன்,''என தெரிவித்துள்ளார்.

 

இந்த டெஸ்ட் மேட்ச்சுகுப் பின் மார்க் வாஹ், வார்னே, டிம் மே மற்றும் சலீம் மாலிக்  ஆகியோர்  சூதாட்ட புகாரில் சிக்கினர். இதில் சலீம் மாலிக்கிற்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

CRICKET, PAKISTAN, SHANEWARNE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS