ரெயில்வே துறை அமைச்சருடன் வேலை செய்ய முடியாது என பாகிஸ்தான் நாட்டு ரெயில்வே அதிகாரி ஒருவர், 2 வருடம் லீவ் கேட்டு விண்ணப்பித்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

பாகிஸ்தான் நாட்டு ரெயில்வே துறையில் கிரேடு 20 அதிகாரியாக ஹனிஃப் கல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி ரெயில்வே அமைச்சர் மேல் புகார் அளித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

 

அதில், ''புதிதாகப் பதவியேற்றுள்ள பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ராஷித் அகமத் ஒரு மோசமான மனிதர். பணி சார்ந்த விஷயங்களில் முறைகேடான நபர். ராஷித் அகமதின் கீழ் இனி பணியாற்றுவது சாத்தியமில்லை என்று  நினைக்கிறேன். தயவுசெய்து எனக்கு 730 நாட்கள் விடுமுறை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,'' என தெரிவித்துள்ளார்.

 

இந்தக் கடிதத்தை பாகிஸ்தான் நாட்டின் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் சமூக வலைதளங்களில் பகிர, தற்போது அக்கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS