கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 324 உயிர்கள் பலியாகின. 2000கோடிக்கு மேல் கடும் இழப்பை சந்தித்துள்ளது.ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.பல மாநில அரசுகளும் ஏராளமான நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.

 

இந்நிலையில் வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காகப் பிரார்த்தனை செய்து கொள்வதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் 22-வது பிரதமராக தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைவரும், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கடந்த 18-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

 

இந்நிலையில், கேரள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார் இம்ரான் கான். இதுதொடர்பாக, அவரது ட்விட்டர் பக்கத்தில், `பாகிஸ்தான் மக்களின் சார்பாக கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை செய்துகொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.

 

இந்தியாவுடன் நட்புறவோடு இருக்கவே விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.இந்நிலையில் கேரள வெள்ளம் குறித்து அவருடைய இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

BY JENO | AUG 24, 2018 10:23 AM #PAKISTAN #KERALAFLOOD #IMRAN KHAN #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS