இந்திய பாடலுக்கு நடனமாடிய பாகிஸ்தான் பள்ளியின் அங்கீகாரம் ரத்தா?

Home > தமிழ் news
By |

பாகிஸ்தானில் இந்திய தேசியக் கொடியை பின்னணியில் படரவிட்டு, இந்திய பாடலுக்கு பள்ளி மாணவர்கள் நடனமாடியதால் தனியார் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் உறவில் பலத்த விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ளது அந்த தனியார் பள்ளி. இங்கு நடந்த கலைநிகழ்ச்சியில் மாணவர்கள் சிலர் இந்திய பாடலுக்கேற்ப நடனமாடியதாலும், பின்னணியில் இந்திய தேசியக் கொடி திரையிடப்பட்டதாலும் பாகிஸ்தானின் தனியார் பள்ளி பதிவு இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேற்படி பாகிஸ்தான் பள்ளி கலாச்சார விழாக்களில் இந்திய கலாச்சாரங்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பாகிஸ்தானின் கவுரவத்தை பாழ்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இதனால் அப்பள்ளியின் அங்கீகாரம் ரத்தானதாகவும் தெரிகிறது. இதனிடையே இந்த வீடியோவும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PAKISTAN, PULWAMAATTACK, SCHOOL, INDIA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS