‘பயிற்சியாளருக்கு 10 ஆண்டுகள் தடை’.. அதிரடியாக அறிவித்த ஐசிசி!

Home > தமிழ் news
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இர்பான் அன்சாரிக்கு 10 ஆண்டுகள் அனைத்து விதமான கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில் இருந்து ஐசிசி அதிரடியாக தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் கடந்த 2017 -ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இலங்கையிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

இதனிடையே பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான ஷார்ஜா, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமதுவிடம் போட்டி குறித்த முக்கிய தகவல்களை கேட்டுள்ளார். இதனை அடுத்து சர்பராஸ் அகமது ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவிடம் பயிற்சியாளர் குறித்து புகார் அளித்துள்ளார்.

பின்னர் விசாரணை நடத்திய ஐசிசி, போட்டியின் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முயற்சித்ததாக பாகிஸ்தானின் பயிற்சியாளர் ஷார்ஜாவிற்கு, அனைத்து விதமான கிரிக்கெட் செயல்பாடுகளில் இருந்தும் 10 ஆண்டுகளுக்கு தடைவிதித்து ஐசிசி அறிவித்துள்ளது.

PCB, CRICKET, PAKISTAN, COACH, BANNED, ICC

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS