"3 ஸ்டம்பையும் காட்டியபடி தில்லாக விளையாடிய கேப்டன்":வைரலாகும் புகைப்படம்!

Home > தமிழ் news
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபரஸ் அஹமத், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், விளையாடிய விதம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

 

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.டாஸ் ஜெயித்த பாகிஸ்தான், முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுளை இழந்து இக்கட்டான நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தது . அப்போது, 6வது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த அந்த அணியின் கேப்டன் அஹமத் மற்றும் தொடக்க வீரர் ஃபாரகர் ஜமான், 147 ரன்கள் சேர்த்தனர். அஹமத், 94 ரன்கள் எடுத்து அணியை நிலைநாட்டினார். 

 

அணியின் கேப்டன் அஹமத், தொடர்ந்து பேட்டிங்கிலும், விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பி வந்த நிலையில், அவர் மீது அதிகமான அழுத்தம் இருந்தது. இந்நிலையில், அணி இக்கட்டான நிலையில் இருந்த போது, அஹமத் நன்றாக பேட்டிங் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் போட்டியில் அஹமத், பேட்டிங் செய்யும் போது தனது 3 ஸ்டம்புகளையும் காட்டியபடி விளையாடினார். அது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

 

தனது பேட்டிங் திறன் குறித்த கேள்விக்கு பதிலளித்த கேப்டன் அஹமத் "என் மீது அதிகமான அழுத்தம் இருந்தது.இதனால் சில பேர் என்னை அணியிலிருந்தும் கேப்டன் பொறுப்பிலிருந்தும் நிக்க முயற்சி செய்து வந்தார்கள்.ஆனால் அந்த அழுத்தங்களை எல்லாம் சமாளித்து,அந்த நேரத்தில் என்னால் நன்றாக விளையாட முடிந்தது.தற்போது நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம்" என்று கூறினார்.

PAKISTAN, CRICKET, SARFRAZ AHMED, BATTING STANCE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS