தெற்கு ஆசிய நாடுகளில் நாய், பூனை ஆகியவற்றை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதைப்போல  ஆப்பிரிக்க நாடுகளில் பன்றிகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் வழக்கம் அதிகமாக இருக்கிறது. வெறுமனே வளர்ப்பது மட்டுமல்லாமல், அவற்றிற்கும்  சில பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்கின்றனர். 

 

அந்தவகையில் தென் ஆப்ரிக்காவில் படம் வரையும் பன்றி தற்போது  பிரபலமாகியுள்ளது. பொதுவாக விலங்குகள் மனிதர்கள் பழக்கப்படுத்தும் பல விஷயங்களை மனிதர்களுக்காக செய்வன. ஆனால் விலங்குகளுக்கு ஓவியம் வரைய பயிற்சியளிக்கப்பட்டதில்லை. அந்தவகையில் இந்த பன்றிக்குட்டிதான் ஓவியம்  வரையும் முதல் விலங்கு ஆகும். விலங்குகளுக்கு பெருமை சேர்த்த இந்த பெண் பன்றிக்குட்டி, தென் ஆப்பிரிக்க பண்ணையில் 2016-ம் ஆண்டு  பிறந்தது.

 

பிறந்த சில நாட்களிலேயே, தென் ஆப்ரிக்காவின் ஹாக் ஹெவன்  என்ற இடத்துக்கு அழைத்து வரப்பட்ட இந்த பன்றிக்குட்டிக்கு ஓவியம் வரையும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆர்வமாய் பிரஷ்ஷை பெயிண்ட்டில் தோய்த்து இஷ்டத்துக்கும் ஓவியப் பலகையில் கிறுக்கி ஓவியங்களை வரையும் இந்த பன்றிக்குட்டியை வாங்குவதற்கு பலரும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

 

ஆனால் அதன் உரிமையாளர்கள் இந்த குட்டியைத் தர மறுப்பதோடு தென் ஆப்ரிக்க கல்ச்சுரல் ஆர்ட் மியூசியத்தில் இதன் ஓவியங்களை காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்திருக்கிறார்கள். உலகிலேயே ஓவியம் வரையும் ஒரே விலங்கு என்பதால் இந்த பன்றிக்குட்டி வரையும் ஓவியங்கள் எல்லாம் சுமார் 300லிருந்து 4000 டாலர்கள் வரை விலை போகிறதாம். அதனாலேயே இந்த பெண் பன்றிக்குட்டியை பிக்’காசோ (Pigcasso) எனலாம். 

 

வாழ்த்துக்கள் 'பிக்’காசோ... 

 

 

BY SIVA SANKAR | AUG 3, 2018 11:45 AM #ART #PAINTINGPIG #PIGCASSO #NONHUMANARTIST #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS