பேஸ்புக், வாட்ஸ் ஆப்புக்கு பிறகு சமூக வலைதளங்களில் பிரபலமானது இன்ஸ்டாகிராம். இன்ஸ்டண்ட்டாக நடக்கும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் காணலாம். இங்கு பதிவிடப்பட்டுள்ள நிறைய வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகின்றன. அப்படித்தான் இப்போது வைரல் ஆகியுள்ளது பூனையை விரட்டி நகம் வெட்டி  விடும் வீடியோ.

 

பூனைகள் பொதுவாக வீட்டுக்குள் ஒரு மனநிலையோடும் வீட்டுக்கு வெளியில் வேறு ஒரு மனநிலையோடும் இருப்பன. உயிர் தகவமைப்புவியலின்படி வீட்டுக்குள் மட்டுமே பூனை தன் வளர்ப்பாளரை நினைவில் வைத்துக்கொள்ளும். நாய்க்குட்டிபோல் கொஞ்சி வாலாட்டும் பூனைகளை காண்பதே அரிது. அவை எப்போதுமே ஒரு வித முன்னெச்சரிக்கையுடன் எதற்கும் தயாராகவே மனிதர்களிடம் நடித்து பழகும் பாங்கு பெற்றவை.

 

ஆனால் இங்கு ஒரு பூனை தன் வளர்ப்பாளரின் மிரட்டலுக்கு அடிபணிந்து  நகம் வெட்டிக்கொள்ளும் காட்சி தற்போது சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் சக்கை போடு போடும் இந்த வீடியோவில், அந்த கருப்பு பூனையின் காலில் இருக்கும் நகங்களை வெட்டிவிட வளர்ப்பாளர் முனைந்தபோது, அவர் கைகளை கடித்தபடியும், அவரது கையை விலக்கிவிட்டபடியும் முதலில் அந்த பூனை மறுக்கிறது. 

 

அதன் பின் பூனை சைசுக்கு மாமிசங்களை வெட்டுவதற்கு பயன்படும் கசாப்பு கடை கத்தி போன்ற ஒன்றை, ஒரு பக்கமாக படுத்திருக்கும் பூனையின் மீது வைக்கிறார். இந்த மிரட்டலுக்கு அஞ்சிய பூனை அசையாமல், நகங்களை வெட்டிக்கொள்ள அனுமதி தருகிறது. மனிதர்களின் மொழியை புரிந்து  கிரேஸியாக நடந்துகொள்ளும் இந்த பூனையின் சேட்டைகள் பிடித்துப் போக இந்த வீடியோவை பலரும் பகிருகின்றனர்.

BY SIVA SANKAR | AUG 21, 2018 3:45 PM #CRAZYCAT #VIRAL #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS