ஏவுகணை நாயகனின் பிறந்த தினம்...அவர் குறித்து திரையிடப்படும் 'பயோபிக்'!

Home > தமிழ் news
By |

மக்களின் குடியரசு தலைவர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் பாரத ரத்னா அப்துல்கலாம்.இன்று அவரின் 87-வது பிறந்த நாள் நடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு மேகாலயா மாநிலம் ஷில்லாங் ஐ.ஐ.எம். கல்வி நிலையத்தில் அவரது வாழ்க்கை வரலாற்றை உணர்த்தும்  பயோபிக் திரையிடப்படுகிறது.இந்த பயோபிக்கை நேஷனல் ஜியோகிராஃபிக் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

மாணவர்கள் தான் நாளைய இந்தியாவின் எதிர்காலம் என்று திடமாக நம்பியவர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம்.அவர் ஷில்லாங் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் மாணவர்களின் முன்பு உரையாற்றிக் கொண்டிருந்தபோது தான் அப்துல் கலாமின் உயிர் பிரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுகுறித்து ஐ.ஐ.எம். வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு திரையிடப்படும் ஆவணப்படத்தில் பலரும் அறியாத உண்மைகள் இடம்பெற்றுள்ளன. கலாமுக்கு நெருக்கமானவர்களின் நேர்காணல்கள் மட்டும் அல்லாமல், கலாமின் அரிய பேச்சுகளும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெறுகின்றன. இந்த ஆவணப்படம் ஐ.ஐ.எம். வளாகத்தினுள் மாணவர்கள் மற்றும் விருந்தினர்கள் மத்தியில் திரையிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குடியரசு தலைவராக இருந்த போதிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனில் மிகுந்த அக்கறையோடு,நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்த அப்துல்கலாமின் பயோபிக் நிச்சயம் மாணவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும்.

A P J ABDUL KALAM, 87TH BIRTH ANNIVERSARY, IIM SHILLONG, BIOPIC

OTHER NEWS SHOTS