‘2 நாளாக போனை எடுக்காத மகள்’.. ஐஐடி வளாக விடுதியில் அதிர்ச்சி சம்பவம்!

Home > தமிழ் news
By |

சென்னை ஐஐடியில் முதுகலை பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் ரஞ்சனா குமாரி.  இவர் சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தின் சபர்மதி விடுதியில் தங்கி படித்துவந்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான இம்மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கடந்த 2 நாட்களாக ராஞ்சனாவை, வெளுயூரில் உள்ள அவரது பெற்றோர்கள் போனில் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துள்ளனர். இதனையடுத்து பயம் கொண்ட ரஞ்சனாவின் பெற்றோர்கள், ரஞ்சனா தங்கியுள்ள விடுதியின் காப்பாளருக்கு அளித்த தகவலின் பேரில், சென்னை ஐஐடி வளாகத்தின் சபர்மிதி விடுதியில் உள்ள ராஞ்சனாவின் அறைக்கு விடுதி பாதுகாவலர்கள் சென்றுள்ளனர். அப்போது ராஞ்சனாவின் அறைக்கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.


சந்தேகமடைந்த விடுதிக் காவலர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போதுதான் முதுகலை மாணவி ராஞ்சனா குமாரி, தனது அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட கோலத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே அவர்கள் கோட்டூர்புரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SUICIDEATTEMPT, COLLEGESTUDENT, WOMEN, SUICIDE, CHENNAI, IIT

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS