5000 தரமற்ற உணவகங்கள்: ஆன்லைனில் ஆர்டர் பண்றவரா நீங்க?

Home > தமிழ் news
By |

இந்தியாவில் யூபர் ஈட்ஸ், ஸ்விகி, ஸூமோட்டோ, ஃபுட் பாண்டா உள்ளிட்ட ஆகிய உணவு டெலிவரி செய்யும் டீலர் நிறுவனங்கள் தங்கள் கிளைகளை நிறுவி முன்னணியில் இருக்கின்றனர். ஏறக்குறைய நகரவாசிகளின் அடிப்படை, அத்தியாவசிய தேவைகளாகவே மாறிவிட்ட இந்த உணவு டெலிவரி செய்யும் செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கைகளும் அதிகமாகியுள்ளன.


உணவகங்களுக்குச் சென்று உணவுண்ணுவதற்கே, உணவின் சுகாதாரத்தின் மீது பயம் உண்டாகும் அளவுக்கு இன்றைய சூழல் இருக்கும் பட்சத்தில், ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளின் ஆரோக்கியத் தன்மையை அறிவதென்பது சிரமமாகவே இருப்பதாக பலரும் கருதுகின்றனர்.

 

இந்த நிலையில், மேற்கண்ட நிறுவனங்கள் இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில், இந்தியாவில் உள்ள 41க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் இருக்கும், தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் பெறாத சுமார் 5000க்கும் மேற்பட்ட உணவகங்களை  தங்களது டீலர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல்களை அளித்துள்ளன. இதனால் ஆன்லைனை நம்பி ஆர்டர் செய்யும் பலர் தற்போது நிம்மதியாகியுள்ளனர். 

FOOD, HEALTH, ONLINEFOODDELIVERY, FOODDELIVERYAPPS, SWIGGY, ZOMATO, UBEREATS, FOODPANDA

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS