Watch Video: 'நண்பன் படத்தை மிஞ்சிய நிஜம்'.. ஆதரவற்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!

Home > தமிழ் news
By |

நண்பன் படத்தில் வருவது போல ஆதரவற்ற மூதாட்டியை இளைஞர்கள் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள காசாங்குளம் பகுதியில் உள்ள சிவன் கோயில் வாசலில், சின்னப்பொண்ணு என்ற 80 வயது பாட்டி அமர்ந்திருப்பார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் காசை வைத்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் இன்று அவர் கோயிலுக்குள் சென்று கைகழுவும்போது நிலைதடுமாறி குளத்திற்குள் விழுந்தார்.

 

குளத்தின் நடுப்பகுதிக்கு சென்று அவர் மிதக்க ஆரம்பித்தார். அதைக்கண்ட அப்பகுதி மக்கள், அவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் சற்றும் யோசிக்காமல், குளத்திற்குள் சென்று பாட்டியைத் தூக்கி கரைக்கு கொண்டு வந்தனர்.

 

அப்போது மூதாட்டியின் கையைப்பிடித்துப் பார்த்த ஒருவர் பாட்டிக்கு உயிரிருப்பதாக தெரிவிக்க, இதைக்கேட்ட இளைஞர்கள் நண்பன் படத்தில் வருவதுபோல அவரை இருசக்கர வாகனத்தில் வைத்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

இருசக்கர வாகனத்தில் மருத்துவமனையின் உள்ளே வரைக்கும் பாட்டியைக் கொண்டு சென்றனர். உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து, அவரின் உயிரைக் காப்பாற்றினர்.

 

விரைந்து சென்று பாட்டியின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்களுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர். மனிதநேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்த இந்த சம்பவம், அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

VIJAY, NANBAN, THANJAVUR

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS