‘பாக்கவே பயமா இருக்கீங்க’..பர்தா அணிந்த பாட்டிக்கு பேரக்குழந்தையைக் காண மறுப்பு!

Home > தமிழ் news
By |

தனியார் மருத்துவமனை ஒன்றில் புதிதாகப் பிறந்த பேரக்குழந்தையைப் பார்க்கும் ஆசையில் மருத்துவமனைக்குச் சென்ற முஸ்லீம் தம்பதியினரை உள்ளேச் செல்ல அனுமதிக்காமல் அலைக்கழித்துள்ள சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜீனியாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அஹமது ஜாஹர் என்பவருக்கு குழந்தைப் பிறந்திருந்தது. இந்த தகவல் அறிந்த குழந்தையின் தாத்தா, பாட்டி பேரக்குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் குழந்தையின் அத்தை மற்றும் மாமா ஆகியோருடன்  மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஆனால் பார்வையாளர்களுக்கான நேரம் முடியவிருக்கும் நேரத்தில் அவர்கள் வந்திருந்தனர்.  இதனால் காவலாளி அந்த முஸ்லீம் குடும்பத்தை மருத்துவமனை வாசலில் தடுத்து நிறுத்தியுள்ளார்.

மேலும் பிறந்த குழந்தையின் அத்தை அர்வா சாஹரும், பாட்டியும் பர்தா அணிந்திருப்பதைப் பார்த்து  'உங்களுக்கெல்லாம் இங்கே அனுமதி கிடையாது, நீங்கள் பார்க்கவே பயமுறுத்தும் விதத்தில் இருக்கிறீர்கள்' என்று கூறி அவர்கள் மனதை புண்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனை தட்டிக்கேட்க வந்த குழந்தையின் தந்தை அஹமது ஜாஹரை ‘நீங்கள் வாயை மூடுங்கள், உங்களை இங்கிருக்கும் டாக்டர், செவிலியர் யாருக்குமே பிடிக்கவில்லை, இனி நீங்கள் எதாவது பேசினால் வெளியே அனுப்பிவிடுவேன்’ என்று சத்தமாக பேசியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது சர்ச்சைக்குள்ளான பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவமனை இதற்கு மன்னிப்பு கோரியும் இனி இப்படி ஒரு நிகழ்வு தங்கள் மருத்துவமனையில் நடக்காது எனவும் இதற்கு காரணமானவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

BIZARRE

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS