‘உஷாரான நியூஸிலாந்து’..ஏமாற்றிய இந்தியா.. ஆனாலும் விளாசிய ‘சர்ச்சை’ வீரர்!
Home > தமிழ் newsநியூஸிலாந்திற்கு எதிரான 4 -ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சியளித்துள்ளது.
இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 4 -ஆவது ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனிலில் நடைபெற்று வருகிறது.
மேலும் இப்போட்டியிலிருந்து விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ரோகித் ஷர்மா கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார். இப்போட்டி ரோகித் ஷர்மாவின் 200 -ஆவது ஒருநாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3 -ஆவது ஒருநாள் போட்டியைத் தொடர்ந்து, காயம் காரணமாக தோனியும் இப்போட்டியில் விளையாடாமல் இருந்தார்.
முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் ஆரம்பம் முதலே நியூஸிலாந்து பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சால் திணறி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ரோகித் ஷர்மா 7 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பின்னர் அவரைத்தொடர்ந்து தவானும் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அதற்கடுத்து இறங்கிய அறிமுகவீரர் ஷுப்மன் கில்லும் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ராயுடுவும், தினேஷ் கார்த்திக்கும் டக் அவுட் ஆனது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க, ஹர்திக் பாண்ட்யா ஒரு ஓவரில் தொடர்ந்து 3 பவுண்ட்ரிகளை விளாசினார். அதற்குள் 16 ரன்களில் அவுட்டாகி பாண்ட்யா வெளியேறியது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து குல்தீப்(15), ஹலீல் அகமது(5), என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சஹால் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பின்னர் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. நியூஸிலாந்து அணியின் சார்பில் போல்ட் 5 விக்கெட்டுகளும், கிரேண்ட்தோம் 3 விக்கெட்டுகளும், அஸ்டில் மற்றும் ஜேம்ஸ் நீசம் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து அணி 14.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- ‘தோனி இங்க என்ன பண்றாரு.. அப்ப கன்ஃபார்ம்’.. வைரல் ஃபோட்டோவால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
- ‘தோனியையும் கோலியையும் ஓரங்கட்டி, இந்திய அணியின் கேப்டன் புதிய சாதனை!’
- 'அடுத்த போட்டியில் தோனி விளையாடுவாரா'?...யாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது?
- ‘டீமுக்கு என்ன தேவையோ, அத புரிஞ்சு ஆடுவாரு’.. இந்திய வீரர் குறித்து கோலி பெருமிதம்!
- ரொம்ப ஆடியாச்சு..இனி ரிலாக்ஸா மேட்ச் மட்டும் பாக்கப் போறேன்.. ஓய்வு குறித்து கோலி!
- டி20 உலகக்கோப்பை அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
- ''4வது ஆர்டர்ல யாரு இறங்குனா நல்லா இருக்கும்''?...மனம் திறந்த கோலி!
- ‘தவான் செய்த வேலை.. கடுப்பாகி முறைக்கும் பாண்ட்யா’.. வைரலான வீடியோ!
- ‘சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச அம்பட்டி ராயுடுவுக்கு தடை’.. ஐசிசி அறிவிப்பு!
- அடுத்த 4 போட்டிகளில் விளையாட கேப்டனுக்கு தடை; மாறும் புதிய கேப்டன்.. ஐசிசி அதிரடி!