முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகனும்,நடிகருமான நந்தமுரி ஹரி கிருஷ்ணா ரசிகர் ஒருவரின் திருமணத்துக்கு சென்று திரும்பும்போது தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே அவரது கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.

 

இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  எனினும் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஹரி கிருஷ்ணா நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தை ஆவார். தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினரான இவர், தெலுங்கு தேசம் கட்சியிலும்  முக்கியப்பொறுப்பு வகித்து வந்தார்.

 

இறந்த ஹரி கிருஷ்ணாவின் மற்றொரு மகன் ஜானகி ராம் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | AUG 29, 2018 10:09 AM #TELANGANA #ACCIDENT #JUNIORNTR #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS